தடுமாறும் போது தாங்கிப்பிடிக்க ஒரு நண்பன் தேவை !
தடம்மாறும் போது தடம்மாறாமல் உடன் இருக்க ஒரு நண்பன் தேவை !
ஆறுதல் சொல்ல அருகிலேயே சில நண்பர்கள் தேவை !
அன்புடன் பேச எப்போதும் சில நண்பர்கள் தேவை !
அவ்வப்போது அரவணைத்துச்செல்ல சில நண்பர்கள் தேவை !
அதட்டி உருட்டி மிரட்டி நம்மை காத்து நிற்க ஒரு முரட்டு நண்பனும் தேவை !
துன்பத்தில் தோளில் சாய்ந்து கொள்ள, சாய்ந்து அழ ஒரு உற்ற நண்பன் தேவை !
ஊர் சுற்றிவர உருப்படியான, உலகம் தெரிந்த சில நண்பர்கள் தேவை !
நாம் எது சொன்னாலும் நம்பிக்கை விசுவாசத்துடன் அப்படியே ஏற்றுக்கொள்ள சில நண்பர்கள் தேவை !
எதிர்த்துப்பேசி, பின் பக்குவமாய் எடுத்துச் சொல்லும் எதார்த்தமான சில நண்பர்கள் தேவை !
இவை எல்லாம் ஒட்டுமொத்தமாய் உள்ள சிலர் நமக்கு நண்பர்களாக இருந்தால் உலகில் இதைவிட சிறந்தது ஏதும் இல்லை
அந்த சிலரை தேடுங்கள் !
கிடைத்தால் அவருடன் காலமெல்லாம் கைகோர்த்துக் கொள்ளுங்கள் !