செட்டிநாடு என்பது தமிழ்நாட்டின் தென்கிழக்குப் பகுதியில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 56 ஊர்களையும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 20 ஊர்களையும் கொண்ட நிலப்பரப்பு ஆகும். இவ்வூர்களில் தனவணிகர்கள் என்றும் நகரத்தார் என்றும் அழைக்கப்படும் நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள் பெரும்பான்மையினராக வாழ்வதால் இப்பகுதி செட்டிநாடு என அழைக்கப்படுகிறது.
நகரத்தார் தமக்குள் ஒற்றுமையைப் பேணிக்காக்கும் வகையில் தாம் வாழும் ஊர்களின் அடிப்படையில் தமக்கென ஒரு பிரிவினை அமைத்து அதற்க்கு “வட்டகை“ என பெயரிட்டு வாழ்கின்றனர்.
குன்றக்குடி மலையை மையமாகக் கொண்டு, மலைக்குக் கிழக்கு, மேற்கு தெற்குப் பகுதிகளில் உள்ள செட்டிநாட்டின் 78 ஊர்களை ஏழு வட்டகை பிரிவாக பிரித்து வழங்குவர். அவை முறையே
01. தெற்கு வட்டகை
02. மேல வட்டகை
03. கீழப்பத்தூர் வட்டகை
04. கீழ வட்டகை
05. மேலப்பத்தூர் வட்டகை
06. பதினாறூர் வட்டகை
07. நீண்டகரைப் பிரிவு
என்பனவாகும்.
பாடுவார் முத்தப்பர் செட்டிநாட்டு எல்லைகளை பின்வரும் பாடலில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.
"வெள்ளாறது வடக்கு மேற்குப்பிரான் மலையாந்
தெள்ளார் புனல் வைகை தெற்காகும் - ஒள்ளிய நீர்
எட்டிக் கடற்கிழக்கா மிஃதன்றோ நாட்டரண்சேர்
செட்டிநாட் டெல்லையென செப்பு".
சோழநாட்டின் பூம்புகார் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து பாண்டிய நாட்டிற்கு வந்த நகரத்தார்கள் 96 ஊர்களில் நிலைகொண்டு வாழ்ந்தனர் என்றும் தற்பொழுது அவ்வூர்களின் எண்ணிக்கை 76ஆக சுருங்கிவிட்டது எனவும் கருதப்படுகிறது. இந்த 76 ஊர்களை பேராசிரியர் முனைவர் அர. சிங்காரவேலன் பின்வரும் இரண்டு வெண்பாகளில் பட்டியலிட்டுள்ளார்.
கோட்டையிலே மூன்று குடிகளிலே ஆறாகும்
பாட்டைவளர் பட்டிஇரு பத்தொன்று - நாட்டமிகும்
ஊர்பத்தாம் ஏரிகுளம் ஊருணி ஒவ்வொன்றாம்
சேர்வயல்கள் ஐந்தென்று செப்பு.
மங்கலம் மூன்றுவரம் ஒன்றே ஆறுபுரம்
திங்கள்வகை ஒவ்வொன்று சீர்புரிகள் நான்கு
பிறஊர்கள் பத்து சிலைகுறிச்சி ஒன்றோ(டு)
அறம்வளர்ப்பார் ஊர்எழுபத் தாறு.
செட்டிநாட்டு 76 ஊர்கள் பின்வருமாறு :